Thursday, December 10, 2009

"ஓரமாய் ஒரு சொட்டு"

"அடுக்களைச் சிந்தனையில்
அதிகாலை விழிப்பு!


சமையல் குக்கரும்
சத்தமிடும் தேவாரமும்
சங்கீத இரைச்சலினூடே
சட்டினியும் இட்லியும்


குட்டிப் பையனின்
வீட்டுப் பாடத்தை
விரட்டியே பிடித்து
கட்டிய கணவனுக்குக்
"காலை டிபன்,காபி தயார்"
"சர்வராய்க் குரல் கொடுத்து
சங்கடமாய் நிமிருகையில்

காணாமல் போன‌
காலணி உறை ஒன்றிற்காகக்
காட்டுக் கத்தலாய்க்
கால்மாட்டில் ஒலிஒன்று
கெட்டுக் கொடுக்குமுன்
"கேரட்டின் தீ...ய்...ந்த வாசம்
படபடப்பில் பரிதவிப்பு!

அள்ளிமுடித்தக் கோலத்தில்
அவசரமாய்க் கிளம்பி
துரிதகதியில் துரத்திப்பிடித்து
ஏறிய பேருந்தின்
ஏற்றத்தின் வளைவில்
'சுருக்'கென்று ஓர் வலி
"அ...ம்...மா!"
அடி வயிறு
அவசரமாய்ச் சத்தமிடுகிறது
"ஒருவாய்க் காபி" யாவது
ஓரமாய்த் தரக்கூடாதா????"

செல்வி